என்ன வளம் இல்லை நம் இந்திய திருநாட்டில்? ஆனால் இறக்குமதி செலவு மட்டும் ஆண்டு ஒன்றுக்கு ரூ இரண்டு லட்சம் கோடி. இது போதாது என்று சில்லாரை வணிகத்தில் அந்நிய முதலிடுக்காக ஒரு பெரிய கும்பல் நாட்டை சுற்றிக்கொண்டுயிருக்கிறது. அந்த கும்பலின் கோஷம் விண்னை தாண்டி கேட்க்கிறது. அந்த கும்பல்க்கு உண்மை தெரியதா இல்லை தெரிந்தும் அவர்களின் சுயநலத்திற்குகாகவும் பண நலத்திற்குகாகவும் அந்நிய முதலிட்டை விளம்பரப்படுத்தி கொண்டுயிருகிறார்க்களா?. அந்த கும்பலுக்கு கீழ்க்கண்ட உண்மைகளை புரியவைக்கவேண்டும்.
ரிலையன்ஸ் பிரெஷ்க்கும் உழவர் சந்தைக்கும் தெருமுனை அண்ணாச்சி கடைக்கும் உள்ள காய்கறிகள் விலை வித்தியாசத்தை இங்கே பாருங்கள்.
காய்கறி விலை
ரிலையன்ஸ் உழவர் அண்ணாச்சி
பிரெஷ் சந்தை
பிரெஷ் சந்தை
தக்காளி 24 17 18
காரட் 45 34 35
பெல்லாரி 32 26 28
உருளை 40 28 30
ஊடகங்களில் சுண்டி இலுக்கிற விளம்பரங்களின் முலம் நாட்டின் முன்னணி வியாபார நிறுவனகள் அந்நிய நிறுவங்களின் கூட்டோடு மேல்தட்டு மக்கள் முதல் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்கள் வரை தங்களின் பல்பொருள் அங்காடிக்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். இந்த ஊடக விளம்பரங்கள் கந்தசக்தியாக இருந்தாலும் பல்பொருள் அங்காடிகள் பாவங்களை மட்டுமே விற்றுகொண்டுயிருக்ககிறது. உயிர் நுட்பம் முலம் உருவாக்கிய காய்கறிகளையும் பழங்கையும் விவரம் தெரியாத மக்களக்கு வியாபாரம் செய்து கொண்டுயிருக்கிறார்கள். இந்த உயிர் நுட்பம் பொருள்கள் முலம் உயிர் நல கேடு விளைந்து கொண்டுஇருக்கிறது.
விலையில் மட்டுமில்லை வித்தியாசம். தரம் மற்றும் சேவையிலும் உள்ளூர் வணிக மக்கள் முன்ணியில் இருக்கிறர்கள். இவர்கள் அழுகிய காய்கறிகளை விற்பதில்லை, கொள்ளை லாபமடிபதில்லை, சில நாள்களுக்கு கடனும் கொடுப்பார்கள். இதனால் பெரும்பாலும் மக்கள் பக்கத்து தெரு அண்ணாச்சி கடையையும் வீட்டுக்கு முன் வரும் தள்ளு வண்டி காய்க கறிகளையும் வாங்குகிறார்கள். இந்திய மக்கள் புத்திசாலிகள். அவர்கள் பல வியாபாரிகளை பார்த்துவிட்டு தான் பொருள்களை வாங்குவார்கள்.
மக்களின் நலம் மட்டுமே குறிகோளாக கொண்டு அரசாங்கம் செயல்பட வேண்டும். தனியார் பண முதலைகளுக்கு ஜாலர அடிப்பது, அவர்களை மட்டுமே முன்னேற்றும் அடைய செய்வது நாட்டின் வளளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும். சமுதாய சமன் ஏற்படவேண்டுமென்றால் வறுமை ஓழிய வேண்டும். அதற்கு நாட்டின் தலைவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து வறுமை ஒழிப்பு வைப்பு நிதியை உருவாக்கி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவை விட்டு வறுமையை வெளியேற்றம் செய்ய வேண்டும். வெள்ளைனை வெளியேற்றி விட்டு வறுமையை மட்டும் நாட்டுக்குள் வளர்த்து கொண்டுயிருந்தால் தலைவர்களை சூனியம் என்று உலகம் துற்றும்.
உலகம் துற்றும் அவலநிலை நமது தலைவர்களுக்கும் நாட்டுக்கும் வரக்கூடாது என்றால் இன்றே அவர்களின் சிந்தனையும் செயல்பாடும் மாறவேண்டும். ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளித்து, பதுக்களையும், கடத்தலையும், கூட்டு கொள்ளைகளை ஒழித்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்ல வேண்டும். அந்த பொன்நாள் எந்நாளோ?
No comments:
Post a Comment