Wednesday, April 28, 2021

விண்ணை தாண்டி செல்வாய்

 விண்ணை தாண்டி செல்வாய்

1, இளமையில்  குறிக்கோள்  கொள்
2. அன்றாடம்  குறிக்கோளை  நினை
3. உடலை  திடம் செய்
4. உள்ளதை  தூய்மை செய்
5. உடல் நலத்தை பேணி செய்
6. மரியாதையை முதன்மையாக்கு
7. அன்பை அரவணை
8. ஞாபகத்தை சக்தியாக்கு
9. நேர்மை ஒன்றே வழி
10. நியாயத்தை கைவிடாதே
11. பல்துறையில்  கால் பதி
12. பழமொழிகளை  கற்றுக்கொள்
13. எதற்கும்  அடிமை  ஆகாதே
14. நல்ல நண்பர்களை  சேர்
15.உலகத்தை உள்ளங்கையில்  வை
16.கற்றதை  காற்றில் விடாதே
17.வளமைக்கு அடிக்கோல்
18.வாழ்க்கையை சொதப்பாதே
19.பாசத்தை கொடு ; பாசத்தை எடு
20. குழப்பத்திற்கு ஆளாகாதே
21. குடும்பம்  ஒரு  மூலாதாரம்
22. நேரத்திற்கு  செல்
23. சூழ்ச்சி வலையில் சிக்காதே
24. உலகை சுற்றி வா
25. சுனாமியை  சந்திக்க  தயார்  செய்

முன்னுரை

வானமே எல்லை என்பது பழையக்கூற்று  . வானத்தையும்  தாண்டி இன்று விஞ்ஞானிகள் சென்ற  கொண்டு  இருகிறார்கள்   என்பது    இன்றைய நிலை. மங்கல்யானும் சந்திராயானும் மக்களை  விண்ணை  தாண்டி அழைத்து செல்ல தயாராகி விட்டது.

இருபது  வயதிற்கு மேல் சாதிக்கும் இளைஞர்கள் காலம் போயி, பிறந்தவுடனே சாதிக்கும் குழந்தை நட்ச்சதிரங்களின் காலம் இது .

வெகு விரைவில் வெற்றி யை நிலை நட்டத் துடிக்கும் மழலை செல்வங்களின் உலகில்    உங்களை  தயார்ப்படுத்த வேண்டும்  என்ற  எண்ணத்தில்  உதிர்த்தது  தான் இந்த சிறிய புத்தகம் .

இதில் கூறியிருப்பது ஒன்றும் புதிதுயில்லை. இதிகாசங்களும், மகான்களும், அன்றோர்கர்களும் , சான்றோர்களும் மனித இனம் காலத்தில் இருந்தே நன்மைகளையும் தீமைகளையும் மக்களுக்கு எடுத்து  சொல்லி வருகிறார்கள்.

அவர்களின் வார்த்தைகளும் உபதேசகளும் தான் உலகை இன்று வரை நிலை
ப் பெறச் செய்யதியிருக்கிறது.

நவீன  உலகத்திற்கு   ஏற்ப இங்கே நான் இன்றைய  தலைமுறைனைரை மையப்படுத்தி இந்த சிறிய புத்தகத்தை வழங்கியிருக்கிறேன். உதாரணாங்களும் அவர்களுக்கு  ஏற்பவே  அமைந்துயிருக்கிறது.  வெறும் கோடு ஒன்றை நான் போட்டுயிருகிறேன். அந்த  கோட்டை அருமையான ரோடாக  மாற்றி  வாழ்க்கை  என்னும் பயணத்தை இனிதாக அமைத்து கொள்ள வேண்டியது வாசகரின் கடமை.

1. இளமையில்  குறிக்கோள்  கொள்

குறிக்கோள் இல்லாமல் வாழ்வது மனித சமுதாயத்திற்கு அழகல்ல.

ஒவ்வெரவரும் இளம் வயதிலே  (5 வயதில் ) வாழ்கையின் குறிக்கோளை நினைக்க வேண்டும் .

முக்கால்வாசி குழந்தைகள்  டாக்டர் , இன்ஜினியர், கலெக்டர்  ஆக வேண்டும் என்று சொல்வார்கள்.

ஏன்யென்றால் இந்த மூன்று  படிப்பும் பதவிகளும் எல்லோருக்கும் பிரபலமாக தெரிந்துயிருக்கும்.

எல்லோரும் போற்றும் வேலையை தான் மிக சிறிய வயதில் குழந்தைகள் தேர்ந்து எடுப்பார்கள்.

இப்படி சொல்லப்படும் குறிக்கோள்கள் எல்லாம் நிறைவேறிவிடுவதில்லை.

சூழ்நிலைக்கும் சந்தர்பத்திற்கும் ஏற்ப மனிதனின் குறிகோள்களை அடைவது மாறும்.

ஆனால்  ஒவ்வெர் குழந்தையும் குறிக்கோள்வுடன் வாழ வேண்டும் .

அப்படி நினைகின்ற குறிக்கோள் மிக பெரியதாக இருக்க வேண்டும்.

இதுவரை யாரும் சாதிக்காததை சாதிக்கவேண்டும் என்று நினைக்க வேண்டும்.

நமது  முன்னால் குடியரசு தலைவர் மேதகு முனைவர்.A .P .J ,அப்துல் கலாம் சொன்னதைப் போல் "Small aim is a crime".

1997 ஆம்  ஆண்டு  ஜூலை 12 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் வட மேற்கு மாகாணத்தின் மின்கோர  என்ற ஊரில் பிறந்த மாலாலா யூசபாய்

தனது பதினோராவது  வயதில் பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் உரிமைக்காகவும்  போராடினாள்.

அவளுவுடைய பெற்றோர் பாகிஸ்தானின் ஸ்வாத் பள்ளத் தாக்கில் பல் வேறு பள்ளிகளை நடத்தி வந்தார்கள்.

அங்கே சிறுமிகளின் அவலநிலையை கண்ட மாலாலா யோசுபாய் பாகிஸ்தானின் பெண்களுக்கு குரல் கொடுக்க துணிந்தார்.

பதினோரு வயது பெணின் துணிச்சலை கண்டு அஞ்சிய தலிபான் தீவிரவாத இயக்கம்  மாலாலா பள்ளிப் பேருந்திற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டனர்.

மூன்று குண்டுகளை பாய்ச்சிய தலிபான் தீவரவாதி நினைத்தான் மாலாலா மரணமடைந்துவிட்டாள்.

மூன்று குண்டுகளில் ஒன்று தான் அவள் இடது நெத்தி வழியாக பயந்து அந்த இளம் சமூக போராளியை சிர்குலைத்தது.

ஆனால் மாலாலா அதிர்சடவசமாக உயிர் பிழைத்து கொண்டாள்.

குண்டு அடிப்பட்ட அந்த இளம் சிறுமியை  உடனடியாக இங்கிலாந்து நாட்டின் பிர்மின்காம் நகருக்கு தனி விமானம் மூலம் அழைத்து செல்லப்பட்டாள்.

அவளும் உயிர் பிழைத்து தனது பதினெலாவது வயதில் உலகின் புகழ்ப் பெற்ற நோபல் பரிசை பெற்றுயிருகிறாள்.    


நமது நாட்டையும் மக்களையும் உலக மக்களையும் வளர்ச்சி அடைய செய்ய வேண்டிய உத்திகளை இளம் வயதிலே யோசிக்க வேண்டும் .

இளம் வயதில் குறிக்கோள் கொள்பவர்கள் வாழ்கையில் மிக பெரிய வெற்றியை நிலை நாட்ட முடியும் என்பதில் எந்த சந்தேகமும் எவருக்கும் இருக்காது .

ஆதலால் ஐந்து வயது முதல் வாழ்கையின் குறிக்கோளை குறி             
      

2. அன்றாடம்  குறிக்கோளை  நினை


தங்களுடைய குறிக்கோளை அடிக்கடி சொல்லிக் கொள்வது  அவசியம். நினைத்தோம்  மறந்ததோம் குறிக்கோளை என்று இல்லாமல் அடிக்கடி குறிக்கோளை நினைப்பதால் அதை நிறைவேற்றுவதற்கு ஒரு மிக பெரிய உந்து சக்தி கிடைக்கிறது.

நிறைய குழந்தைகள் அழுத்தமாக குறிக்கோளை வெகு இளம் வயதில் தெரிய படித்தினாலும் ஆண்டுகள் ஆக ஆக அதை மறந்து விடுவார்கள் .

உங்களுடைய குறிக்கோளை அன்றாடம் படிக்கும் புத்தகத்திலோ நோடீல்லோ முதல் பக்கத்தில் பெரிய எழுத்தில் எழுதி வைத்துக் கொள்ளுங்கள். தினமும் அதை திறக்கும் சமயத்தில் உங்கள் குறிக்கோள் ஞாபகத்திற்கு வரும்.

குறிக்கோளை குடும்பதினர்வுடனும் ஆசிரியர்கள்வுடனம் நண்பர்களுடனும் பகிர்ந்து கொள்வதால் அவர்களும் உங்கள் குறிக்கோள் நிறைவேறுவதற்கு உறுதுணையாக இருப்பார்கள்.

பல நேரங்களில் நாம் மறந்தாலும் நமது குறிக்கோளை மற்றவர்கள் மறப்ப த்தில்லை. சில நேரங்களில் நமது பகைவர்கள் நமது மெத்தான போக்கை எள்ளி நகைக்கும் போது நமது குறிக்கோளை அடைவதற்கு வழி செய்கிறது.

அமெரிக்காவின்  டெசேஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் இந்திய வமசவளினற்கு பிறந்தவன்  ரூபன் அபிலாஷை பால்.

 தனது இரண்டு வயது பிறந்த நாளை கொண்டாடவதற்கு முன்பே கணினியை இயக்குவதில் வளவாரணன்.

எட்டாவது வயதில் உலகின் மிக சிறிய வயது  CEO வாக ரூபன் பால் தேர்வு செய்யப்பட்டுயிருகிறான்.

இவனது கம்பெனி ப்ருடெண்ட் கேம்ஸ்  (Prudent  Games )சிறுவர்களுக்கு இணையதளத்தில் பாதுகாப்பை கற்றுக் கொடுக்கிறது .

உலக பொருளாதார நிபுணர்களும் இணையத்தின் வலுனர்களும் சந்திக்கும் சர்வதேச மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் ரூபன் பால் மிகவும் பிரபல பேச்சாளர்.

இணையதளத்தில் சிறுவர்களுக்கான விளையாட்டுகள்  மற்றும்   பாதுகாப்பு மற்றுமின்றி இ வன் தனது இரண்டாவது வயதில் அமெரிக்காவின் "அழகிய குழந்தை " பட்டமும் பெற்றுயிருகிறான்.

நீச்சல், ஜிம்னாச்டிக்க்ஸ், இன்லைன் ஹாக்கி, பையனோ, டரும்ஸ்  மற்றும் சமைபத்திலும் ரூபன் பால் மிக திறமைசாளி.

அன்றாடம்  குறிக்கோளை  நினைப்பதால் அதை அடைவதற்கு தானாகவே
வழிவகுக்கும்.

 3. உடலை திடம் செய்
Shruti has mastered some of yoga's most challenging positions. She can easily hold her entire body on the strength of her little arms and hang her legs backwards over her head
உடல் உறுதியாக இருந்தால் தான் உள்ளமும் உறுதியாக இருக்க முடியும். உடல் நலத்தை பேணி காப்பது ஒருவரின் தலையாயே   கடமை.

இன்று  எல்லா இயற்கை வளங்களும் மசுபட்டுயிருப்பதால், உடல் நலம் எளிதாக பாதிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

அதிகாலையில் உடல் பயிற்சி செய்வதும் நடைப்பயற்சி செய்வதும் மிகவும் நன்று. இல்லையென்றால் யோகா செய்வது சல சிறந்தது.

இந்திய பாரம்பரியத்தில் அதிகாலையில் விளித்து கொள்வது ஒரு அருமையான வழக்கமாக கொண்டுயிருந்தர்கள்.


எழுந்தவுடன் மாட்டை கவனிப்பதும், விவசாய வேலைக்கு செல்வதும் வாடிக்கையாக இருந்தது.

சூரியன் உத்திபதற்கு முன்பு நிலங்களுக்கு செல்வார்கள். உணவும் எளிதாகவும் உடலுக்கு உகந்தாகவும் இருந்தது.

நாம் இன்று  விவசாயத்திற்கு செல்ல முடியாவிட்டாலும், தேக நலத்தை பேணி காப்பது அவசியம்.

அதற்காக யோகா பயிற்சி சல சிறந்தது. உடலையும் உள்ளதையும் ஒருமுக படுத்துவது தான் யோகாவின் சிறப்பு அமுசம்.

அமெரிக்கர்களும் ஆஸ்திரேலியர்களும் இந்தியாவின் பாரம்பரிய யோக கலையை கற்று மேன்மைடைந்து கொண்டுயிருக்கிற வேலையில் நாம் யோகாவை மறக்க கூடாது.

ஸ்ருதி  பண்டேவிற்கு ஆறு வயது தான். ஆனால் உத்தர பிரதேஷ் மாநிலத்தில் உள்ள ஜான்சி நகரில் யோகா பயிற்சியாளர். நுற்றுக்கும் அதிகமான மக்களை தினமும் யோகா கலையில் திறன்மிக்கவர்களாக மாற்றுகிறாள்.

4. உள்ளத்தை தூய்மை செய்  
உள்ள தூய்மையின் அவசியத்தை மனித குலம் தோன்றிய காலத்திலிருந்து வலியுறுத்தியிருகிறார்கள்.  

உடலை தூய்மையாக வைத்துகொண்டு உள்ளத்தை தூய்மையாக வைக்காவிட்டால் வாழ்க்கையில்  வளர்ச்சி இருக்காது . 

தியானம் செய்வதால் மனதிற்கு சாந்தி வருகிறது. ரிஷிகளும் ஞானிகளும் பண்டைய காலத்தில் தினமும் நீண்ட நேரம் தியானம் செய்வது வழக்கம். 

அன்றாடம் தியானம் செய்வதால் அவர்கள் சந்தசொர்பிகளாக இருந்தார்கள். 

கண்களை முடிக்கொண்டு ஒரே இடத்தில அமர்ந்து வேறு எதை பற்றியும் சிந்திக்காமல் மனதையும், மூளையும் அமைதிப்படுத்துவேதே தியானம்.

இந்த தியான கலையும் இந்தியாவின் ஒரு மிக பெரிய பாரம்பரிய சொத்து . அதை நம் நாட்டவர்கள் பாதுகாக்க வேண்டும்.

குழந்தை பருவத்தில் இருந்து ஒவர்வொரும் தியானம் செய்ய தொடங்க வேண்டும் .

5.  உடல் நலத்தை பேணி செய் 
நோய் இல்லாமல் வாழவேண்டும். அதற்கான முயற்சிகளை தினமும் எடுக்க வேண்டும். 

தினமும் நன்றாக யோகா அல்லது உடல் பயிற்சி செய்வதால் நோய் தாக்குவதற்கு வாய்ப்பு  இல்லை .    

இரண்டு விதமான நோய்கள் மனிதனை தாக்குவதாக ஆய்வுகள் கூறுகின்றன.

உடலின் உள்ளே இருந்து வரும் நோய் மற்றும் வெளியில் இருந்து வரும் நோய்.

உள்ளே இருந்து வரும் நோய்களை கட்டுப்படுத்த சிறிது சிரமம். ஆனால் வெளியில் இருந்து வரும் நோய்களை எளிதாக தடுக்கலாம்.   

யோகா, தியானம் அல்லது உடல் பயிற்சிகள் செய்வதன் மூலம் தொற்று நோய்கள் வருவதை தடுக்க முடியும்.

அமெரிகாவில் யோகா மூலம் ஆண்டு ஒன்றுக்கு $400 பில்லியன் வருமானம் வருகிறது. 

அதனால் நமது பாரம்பரிய கலைகளை பின்பற்றினால் நோய்களில் இருந்து 
நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.     

6. மரியாதையை முதன்மையாக்கு 


மரியாதையை கொடுத்து தான் மரியாதையை வாங்க முடியும். எல்லோரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் பழுகுங்கள். இதன் பயனை நீங்கள் முற்றிலும் உணரலாம்.

மரியாதையாக நடபவர்களுக்கும் அவமரியாதையாக  நடபவர்களுக்கும் இமாலய வித்தியாசம் இருக்கும்.

முதல்   குழுவிற்கு எங்கு சென்றாலும் வரவேற்பு இருக்கும். இரண்டாவது குழுவிற்கு எதிர்ப்பும் அவமரியாதை மட்டும் தான் மிஞ்சும்.

7. அன்பை அரவணை
அன்பாக பேசுபவரும் நடப்வரும் கடவுளுக்கு இணையானவர்கள்.  இதைத்தான் எல்லா மதங்களும் போதிகின்றன.  மதம், இனம், மொழிகளை கடந்து மனிதர்களாக வாழவேண்டும்.

எந்த சூழ்நிலையிலும் அடுத்தவர்களிடம் கோபமாக பேசதீர்கள்.

மற்றவர்கள் உங்களிடம் எப்படி நடந்து கொள்கிறார்கள், அதற்கு தகுந்தாற்போல் நீங்கள் நடக்க வேண்டும் என்று நினைத்தால், நல்லத்தை மட்டும் பின்பற்றுங்கள்.

கோபத்தையும் தீமையும் திருப்பி தரத்திர்கள்.

 வீட்டிலும் வெளியிலும் நாம் எதிர்பாராத பிரச்சனைகள் வரலாம். அந்த நேரத்தில் அமைதியை மட்டும் கடைபிடிப்பது நல்லது .

அடிக்கு அடி; உதைக்கு உதை என்று எல்லா விசியங்களையும் அணுக கூடாது.

அமைதியனர்வர்கள் அழிவதுமில்லை; கோபகாரர்கள் வளர்வதுமில்லை.   

8. ஞாபகத்தை சக்தியாக்கு
E. S. Satajit. Photo: M.Srinath
தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்துயிருக்கிற உலகில் ஞாபக சக்தி அதல பதலத்தில் இருக்கிறது .

National Sample Survey Organisation (NSSO) 2014யின் படி கடந்த பத்து வருடங்களாக கொழுப்பு பண்டங்களை இந்தியர்கள் உண்பதில் பத்து சதவிதம் உயர்ந்துயிருக்கிறது .

குளிர்பானங்கள் மற்றும் சிப்ஸ் வகைகளை உண்பதில் ஐந்து சதவிதம்  உயர்ந்துயிருக்கிறது.


உட்டசத்து இல்லாத உணவு ஞாபக சக்திக்கு பெரிய எதிரியாக இருக்கிறது.

இளம் குழந்தைகள் junk food களையே விரும்பி உண்ணுகிறார்கள். நூட்லஸ், பரோட்டா மற்றும் பதபடுதப்பட்ட உணவு  வகைகளை உண்ணும்   போது  குழந்தைகளுக்கு உடலும் மூளையும் வளர்ச்சியடைவதில் சிரமம் ஏற்படுகிறது.   

இதை அறிந்த வல்லுனர்களும் கல்வி துறையிர்களும் பெற்றோர்களுக்கு எச்சரிக்கை  விடுத்தனர். 

கடந்த சில மாதங்களாக குழந்தைகள் junk  food சாப்பிடுவதை குறைப்பதில் வெகுவான முன்னேற்றம் ஏற்பட்டுயிருக்கிறது.

ஊடகங்களும் நண்பர்களும் junk food யை பற்றி விளம்பரப்படுத்த கூடாது.

பொதுவாக குழந்தைகள் ஊடகங்கள் வழியாக தான் junk food உண்பதை ஒரு பழக்கமாக கொண்டுயிருகிறார்கள்.        

ஊடகங்களின் மனதை சுண்டியிலுக்கும் விளம்பரங்களினால் சிறார்கள் junk food க்கு அடிமையாகிறார்கள்.

ஞாபக சக்தியை அதிகரிக்க junk food மற்றுமின்றி தயானம் செய்யவது அவசியம்.

மேலே உள்ள படத்தில் இருப்பவர் சிறுவன் E.S.Satajit. இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆழ்வர் திருநகிரி என்ற ஊரில் மாளவியா நர்செரி பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். பத்தே வயதாகும் satajitக்கு இராமாயணத்தில் எந்த பகுதியை கேட்டாலும் தெரியும்.

satajit ஒரு நாள் முழுவதும் ராமாயணம், ஸ்ரீ.ஆண்டாளின் பாசுரம் போன்றவற்றை தங்கு தடையின்றி பேச முடியும். 
     

9. நேர்மை ஒன்றே வழி
வாழ்கையில் முன்னேற்வதற்கு பல வழிகள் உண்டு.  ஆனால் அவற்றில் முதன்மையானது நேர் வழி.

குறுக்கு வழியில் சென்றால் எளிதில் இலக்கை அடையலாம் என நிறைய பேர்கள் தப்பு கணக்கு போடுகிறார்கள் .

அவர்கள் கணக்கு மட்டுமின்றி வாழ்கையும் அழிந்துவிடுகிறது.

இது expressway களின் காலம். குறுக்கு வழியில் செல்லவதைவிட நேர் வழியில் சென்றால் வெகு விரைவில் போக வேண்டிய இடத்திற்கு போகலாம்.

எந்த கட்டத்திலும் உண்மையை தவறவிடாதிர்கள்.

சிலர் உண்மைக்கு புறம்பாக நடத்திய வாழ்கையில் வெற்றி கண்டுயிருகிறார்கள் என்று நினைத்து நீங்கள் அதே வழியில் சென்றால் கூடிய விரைவில் வீ ழ்ச்சி தான்.

வாய்மைக்கு நிரத்தர தோல்வியில்லை. அதைப்போல் பொய்மைக்கு நிரத்தர  வெற்றியுமில்லை.

 கொஞ்ச நேரத்திற்கோ மாதத்திற்கோ குதூகுலமும் கொண்டடமும் அடைவதற்கு பொய்மை இடம் தரும். ஆனால் நிரதரமாக வாழ்க்கையை சிதைத்து விடும்.

கொஞ்ச நாட்கள்     குதுகுலமா இல்லை நிரந்தர அமைதியா என்று நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.



10. நியாயத்தை கைவிடாதே
நேர்மை, நியாயம் மற்றும்  நீதியை   வாழ்கையில் கடைபிடிப்பவர்கள் ஒரு போதும் நிரந்தரமாக வீழுவதில்லை.

நியாயம் தவறி நடப்பவர்கள்  நிரம்தரமாக வாழ்வதுமில்லை.

வெற்றியும் வெகுமதியும் வருவதற்கு சிறிது தாமதமாகலாம். ஆனால் நியாயத்தை கடைபிடிப்பவர்களுக்கு வெற்றியும் வெகுமதியும் வந்தே தீரும்.
 


11. பல்துறையில்  கால் பதி
இந்த அதிநவீன உலகில் ஒரு துறையில் மட்டுமின்றி பல் துறைகளில் சாதிப்பதை அவசியமாகி கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுயிருகிறது.

வேகமாக சுழன்று கொண்டுயிருக்கிற உலகில் நாம் மட்டும் அன்ன நடைப் போட்டு நடக்க முடியாது .

பல் துறைகளில் கால் பதிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

படிப்புக்கு ஏற்ற வேலை, குடும்பம், குழந்தைகள், மனசுக்கு பிடித்த கைத்தொழில், குடும்ப வள்ளர்சிக்கு ஏற்ற உதவி மற்றும் ஆலோசனை என்று பெண்கள் பல் துறைகளில் முன்னேற்றம் அடைகிறார்கள்.

படிப்பு, வேலை, குடும்பம், விளையாட்டு, இதர வருமானம் என்று ஆண்கள் வாழ்கையை வசந்தமாகி கொள்கிறார்கள் .

கணினி உட்கார்ந்து கொண்டு கைபேசியில் பேசுவதும், இணையத்தில் தேடுவதும் தினசரியை படிப்பதும், சாப்பிடுவது, தொலைகாட்சி பார்ப்பது போன்றவை ஒரு விதமான குணம்.

இந்த குணம் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என வல்லுனர்கள் கூறிகிறார்கள்.

எதை செய்தாலும் அதை அளவுடனும் திருத்தமாகவும் செய்ய வேண்டும்.
தொடர்ந்து பதினைத்து மணி நேரம் ஒரே வேலையை செய்வதால் உடலும் உள்ளமும் வெகுவாக பாதிக்கும்.

பல் துறையில் கால் பதித்தாலும் உடல் நலத்தையும் உள்ளத்தின் தரத்தையும் பாதுகாக்க வேண்டும்.

12.பழமொழிகளை  கற்றுக்கொள்
  

  
      மொழிகளில் முதலில் வரவேண்டியது நம் தாய்மொழி. மற்ற மொழிகள் எல்லாம் தாய்மொழிக்கு அடுத்ததாக தான் வர வேண்டும்.

யார் ஒருவர் தாய்மொழியை மதிக்கவில்லையோ அவர்களுக்கு எந்த செல்வம் இருந்தாலும் மதிப்பில்லை.

தமிழர்களிடத்தில் தாய்மொழி பற்று கொஞ்சம் குறைவு தான் என்பது பொது கருத்தாக இருக்கிறது.

நமது தாய்மொழியை முதன்மை மொழியாக கொண்டாலும் பல்வேறு மொழிகளை கற்பது அவசியம்.

நாட்டின் மற்ற பகுதிகளில் பேசப்படும் ஹிந்தி மொழியை கற்பது நல்லது. தமிழ்நாட்டை தவிர இந்தியாவின் மற்ற பகுதிகளில் ஹிந்தி மொழியை மக்கள் அறிந்துயிருகிறார்கள்.

அதனால் ஹிந்தி மொழியை கற்பதும், எழுதுவதும் பேசுவதும் நமக்கு  நல்லது.

ஆங்கிலம் இப்பொது பள்ளிக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. இந்தியாவின் வளர்ச்சிக்கு குறிப்பாக I .T துறையில் அதிவேகமாக வளரந்ததற்கு நமது ஆங்கில அற்றேலே காரணம் .

பல மொழிகளை கற்பதினால் நமது சிந்தனைகள் விரிவுவடைவதுடன் செம்மைடையும்.

தாய் மொழி மட்டுமில்லாமல் வேறு பல மொழிகளையும் கற்று கொள்ள வேண்டும்.

அதிக மொழிகளை தெரிந்து கொள்வது  நன்மையே தீமை ஒன்றுமில்லை.

13. எதற்கும்  அடிமை  ஆகாதே

ஒரே பழக்கத்தை தொடர்ந்து செய்து கொண்டுயிருந்தோமானால் அதற்கு அடிமையாகிவிடுவோம். தொடர்ந்து தொலைகாட்சி பார்ப்பது, தொடர்து  இணையைத்தில் தேடுவது, தொடர்ந்து சாராயம் அருந்துவது, தொடர்ந்து  கைபேசியில் விளையாட்டு விளையாடுவது போன்ற செயல்கள் நம்மை அதற்கு அடிமைப்படுத்துவதாகும்.

மாமிசம் சாப்பிடுவது, அடிக்கடி குளிப்பது (தினமும் ஐந்து முறை பத்து முறை) போன்ற பல செயல்களை தொடர்ந்து செய்வதால் அடிமையென்ற பட்டம் மட்டமின்றி பல நோய்களையும் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இளளைய தலையமுறைக்கு கைப்பேசி, கணினி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், சாராயம் மற்றும் சிகரெட்  அடிக்கடி உபயோகத்திற்கு வருகிறது.

ஒரே வேலையை தொடர்து செய்வதாலும் junk நிறைந்த உணவுகளை உண்பதாலும் மனிதனுக்கு பல வியாதிகள் வருகிறது.

கடினமாக உழைத்த சம்பாதித்த பணத்தை மருந்துக்கும் மருத்துவர்க்கும் கொடுப்பதே வாடிக்கையாகிவிட்டது.

14. நல்ல நண்பர்களை  சேர்
நண்பர்கள் வாழ்கைக்கு பிராணவாயு (Oxygen) மாதரி. இதில் நல்லவர்கள் கெட்டவர்கள் மற்றும் கொடுமையானவர்கள் என பலவிதம் உண்டு. நல்ல நண்பர்களை தேர்வு செய்வது நமது கடமை.

அருணாச்சலம் , டாம் மற்றும் அப்துல்லா ஆகிய மூவரும் பனிரெண்டு வயதில் திருச்சியில் உள்ள  புனித வளனார்  (St.Joseph's) பள்ளியில் எண்பது வருடங்களுக்கு முன்னால் சேர்ந்தார்கள்.

தொணுற்றி இரண்டு வயதாகும் இவர்களுக்கு இளைய வயது நட்பினால் மூன்று நான்கு தலைமுறைகள் முன்னேற்றம் அடைந்து இருக்கிறது.

இந்தியா, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் வசிக்கும் மூவரும் ஒவ்வெரு வருடமும் தங்களின் இடத்தில் ஒன்று கூடுவது வழக்கம். 

இவர்கள் சேர்ந்து பேசும்போது யவர்க்கும் பொறமை ஏற்படுவது இயல்பு.

நட்பை பற்றி ஒரு சிறு கவிதை 

இதயம் கூட இடைவெளி விட்டு தான் துடிக்கும்
ஆனால் அந்த இடைவெளியில் கூட உன்னை பற்றி தான் நினைக்கும் 
என்  இதயம் நண்பா .  

நல்ல நண்பர்களை தேடி கண்டுபிடியுங்கள் வாழ்க்கையை அனுபிவிங்கள்.  
          

15.உலகத்தை உள்ளங்கையில்  வை 
பொது அறிவு எல்லோருக்கும் அவசியம். 

எல்லா வேலைகளும் போட்டி தேர்வு முலியமாக தான் பணியாளர்களை தேர்வு செய்கிறார்கள்.   அதனால் அன்றாடம் தினசரி படிப்பதும் தொலைகாட்சி பார்ப்பதும் இணையத்திலும் கைபேசியிலும் செய்திகளை சேகரிப்பதும் அவசியம்.

தொடர்ந்து செய்தி சேகரித்து வந்தால் எதைப்பற்றியும் ஒருவரால் விவாதிக்கவும் எழுதவும் முடியும்.

தினசரி படிப்பதால் மனிதனின் சிந்தனை விருவுடைவதுடன் செயலும் திறனடையும்.

      

வெ.இறையன்பு இ.ஆ ப  அவர்கள் இன்று ஒரு பிரபல அரசாங்க அலுவலர். லட்சகணக்கான இந்தியர்கள் எழுதும் UPSC தேர்வில் வெற்றி பெற்று மக்கள் சேவையிலும் நாட்டின் சேவையிலும் சிறந்து விளங்குகிறார்.

குழந்தை பருவத்திலிருந்து அவர் புத்தகங்களை படிப்பதும், தினசரிகள் வசிப்பதும் பழக்கமாக கொண்டுயிருந்தார். இது அவருடைய வாழ்க்கையின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது.   

16.கற்றதை  காற்றில் விடாதே

கற்றதை விட அதை மனதிலும் மூளையிலும் தேக்கி வைப்பதே முக்கியம். 

எல்லாவற்றையும்  படிப்பதும்  தெரிந்து கொள்வதும்  எளிது. படித்தவற்றை ஞாபகத்தில் வைத்து  கொள்வது மிகவும் சிரமம்.

அந்த மிக சிரமமான காரியத்திற்கு சில யோசனைகளை.

படித்தவற்றை குறிப்பு எடுத்து கொள்ளுங்கள். நோட்டில் மற்றுமின்றி உங்கள் மடிகணினி மற்றும் கைப்பேசியிலும் சேகரித்து கொள்ளலாம்.

மடிகணினி அல்லது கணினியில் சேகரிக்கும் போது பைல் பெயர் (File Name) வைத்து வகைபடுத்தி கொள்ள வேண்டும்.

அப்படி சேகரித்து வைத்த பைல்களை அடிக்கடி Hard Disk யில் சேமித்து கொள்ள வேண்டும். இது சிரமப்பட்டு சேகரித்த தகவல்களை தவறவிடாமல் தடுப்பதற்கு. 

ஓர்  இடம் மட்டுமின்றி பல இடங்களில் சேமித்து வைப்பது நல்லது.  

இப்படி சேமித்து வைப்பதை மாதத்திற்கு இருமுறையாவது பார்க்க வேண்டும்.

Search பட்டனை தட்டினால் இன்று நமது பைல்கள் வந்துவிடும்.

இந்த கணினி யுகத்தில் சேமிப்பதும் சேமித்ததை தேடி கண்டுபிடிப்பதும் மிகவும் எளிது. 

ஆனால் கடல் போல் இருக்கும் தகவல்களை அன்றாடம் புரட்டி பார்ப்பது அவசியம்.  
         


17.வளமைக்கு அடிக்கோல்
Sarathbabau. Photograph: Sreeram Selvaraj
வாழ்கையில் வறுமையில்லாமல் வாழவேண்டும் என்பதே ஒவ்வெரு மனிதனின் குறிக்கோள். ஆனால் உலகில் முப்பது சதவிதத்திற்கும் மேற்ப்பட்ட மக்கள் மூன்று வேளை உணவின்றி தவிக்கிறார்கள்.

எல்லோருக்கும் எல்லாமே கிடைக்காது. குறைந்தது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், தேவைக்கு ஏற்ற பணம் வேண்டும்.

தேவைக்கு ஏற்ற பணம் வேண்டுமென்றால் படிப்பும் வேலையும் வேண்டும்.

இன்று எல்லாரும் உயர்க்கல்வி கற்கின்ற நிலையில் இருக்கிறோம். பட்டம் பெற்ற பிறகு வேலையில்ல பட்டதாரியாக வாழ்கையை ஒட்டவேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு (CII) வின் ஆய்வில் வந்துள்ள தகவல் "எண்பது சதவித பட்டதாரிகள் வேலையில் சேர்த்து கொள்ள முடியாத நிலையில் அறியாமையின் பிடியில் சிக்கி  தவிக்கிறார்கள்.

நாட்டின் கல்வி மற்றும் மெத்தன போக்கும் தான் முக்கிய காரணங்கள்.

வறுமையை ஒழித்து வளமையை வளர்க்க வேண்டுமென்றால் படிப்புடன் திடமான வேலையை செய்ய வேண்டும்.     

சரத்பாபு வின்  வாழ்கை பயணம் எல்லோருக்கும் ஒரு அற்புத உதாரணம்.    சென்னையின் மடிபக்கத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஐந்து குழந்தைகளை கொண்டு குடும்பத்தில் அம்மா தீபா ரமணி மட்டும் சத்துணவு கூடத்தில் வேலை செய்து வந்தார்.

சென்னையில் பள்ளி படிப்பை முடித்து பிலானியில் உள்ள BITS யில் டிகிரி பட்டம் பெற்றார். பிறகு அகமதாபாதில் உள்ள புகழ்ப் பெற்ற IIM யில் MBA பட்டம் பெற்றார்.

வேலை அவரின் வீடு தேடி வந்தது. சம்பளம் ஒரு கோடி ரூபாய்  ஒரு வருடத்திற்கு. ஆனால் சரத் அதனை ஏற்றுக் கொள்ள வில்லை. அவரது அம்மாவின் இட்லி கடையை பெரிய அளவில்  Food King என்ற பெயரில் தொடங்கி  வருடத்திற்கு ரூபாய் எட்டு கோடிக்கு வியாபாரம் செய்கிறார்,          


18.வாழ்க்கையை சொதப்பாதே
நன்றாக வாழ்கைகையை தொடங்குபவர்கள் எல்லோரும் நன்றாக வாழ்கையை நடத்தி செல்வதுயில்லை. நிறைய நபர்கள் நடுவில் வாழ்கையை சொதபிவிடுவதுண்டு.

சில நபர்கள் ஆரம்பத்தில் வாழ்கை சொதபினாலும் பிறகு செளிமை அடைய செய்வார்கள். இதற்கு காரணம் குறித்த நேரத்தில் நல்ல முடிவுகளை எடுப்பது தான்.

கல்வி, வேலை, வருமானம், குடும்பம், மன அமைதி, உடல் ஆரோக்கியம் என பல்வேறு குறிகள் வாழ்கையில் நன்றாக இருக்க வேண்டும். இதில் ஒன்று குறைந்தாலும் மற்றவை பாதிக்கப்படும்.

குறிப்பாக நல்ல கல்வியிருந்தும் நல்ல வேலையோ நல்ல வருமானமோ இல்லையென்றால் வாழ்கை கசப்பாக தான் இருக்கும்.

கல்வி, வேலை, வருமானம் போன்றவை இருத்தும் குடும்பம் இல்லை என்றால் வாழ்கை புளிக்கும்.

குடும்பத்தின் முக்கியதுவத்தை இளைய சமுதாயம் நன்கு அறிய வேண்டும். மேலை நாடுகள் குடும்பத்திற்கு கொடுக்க வேண்டிய முக்கியதுவத்தை குறைத்ததனால் இன்று அவர்களின் சமுதாயம் சீரழிந்துவிட்டது.

அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற வளர்ந்த நாடுகளில் இளைஞர்கள் இன்று சிறியான வழிகாட்டுதல் இல்லாமல் தவிக்கிறார்கள்.

விவாகரத்து, கல்யாணம் செய்து கொள்ளாமல் உடலுறவு வைத்து கொள்ளவது, மிக இளம் வயதில் கர்ப்பம் அடைவது போன்ற சமூக கேடுகள் மேலை நாடுகளை அழித்து ஒழித்து விட்டது.

அதே கலாச்சாரம் இப்போது இந்தியாவையும் தோற்றி கொண்டுயிருக்கிறது. இதை நாம் அழிக்கவிட்டால் அது நமது நாட்டையே அழித்துவிடும்.   

கல்வி, வருமானம் மற்றும்  குடும்பம்  இருத்தும் உடல் ஆரோக்கியம் இல்லை என்றால் வாழ்கை வெறுத்து போய்விடும்.

வாழ்கைக்கு தேவையான எல்லாவற்றையும் பெற்றுயிருப்பது அவசியம்.

தமிழ்நாட்டின் மிக பெரிய தொழில் நிறுவனமான சக்தி குழுமம் பொள்ளாச்சி யை   தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இதனை உருவாகிய அருள்செல்வர்.முனைவர்.ந.மகாலிங்கம் அவர்கள் தனது தொணுரவது வயதில் காந்தி ஜெயந்தி தின விழாவில் பேசி முடித்த பிறகு மாரடைப்பால் காலமானார்.

இவரின் வாழ்கை ஒரு முழுவதும் பெற்ற வாழ்கை எனலாம்.

வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து சரியான திசையில் கொண்டு செல்ல வேண்டும்.
   

19.பாசத்தை கொடு ; பாசத்தை எடு
பாசமில்லா வாழ்க்கையும் வசமில்லா மலரும் ஒன்று தான். நாம் என்ன கொடுக்கிறோமோ அது தான் நமக்கு திருப்பி கிடைக்கும். 

இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் மக்களிளுடைய உள்ள பாசமும் நேசமும்.

பல முறைகள் இந்த காட்சியை பார்த்துயிருக்கிறேன். பேருந்தில் பயணம் செய்யும் போது ஒரு இடம் காலியானால் அதை மகளையோ மகனையோ அமர்த்தி அழகு பார்ப்பது பெற்றோரின் குணம்.

இதற்கு மாறாக மேலை நாடுகளில் தன்னலம் தலைவிரித்து ஆடுகிறது.

குழந்தைகளின் வாழ்க்கைக்காக உண்ணாமலும் உரங்காமலும் உழைக்கும் பெற்றோர்கள் இந்தியாவில் அதிகம். அவர்களின் குழந்தைகளின் வாழ்கை வளர்ச்சி ஒன்றே குறிக்கோள்.

இப்படிப்பட்ட பெற்றோர்களின் எண்ணிக்கை வேகமாக குறைந்து கொண்டு வருவது மிகவும் வருத்தமளிக்கும் செயல்.

தன்னலம் கருதாத பெற்றோர்கள் கீழ்மட்டத்தில் அதிகம் காணப்படுகிறார்கள். இதற்கு காரணம் குழந்தைகளின் வளர்ச்சியை தனது வளர்ச்சியாக கருதுகிறார்கள்.

பெற்றோர்கள் செய்யும் தியாகத்திற்கு நன்றி கடனாக குழந்தைகள் வாழ்க்கையை நன்றாக அமைத்து கொள்ளவேண்டும்

வளர்ந்து வளமையான வாழ்க்கையை வாசபடுத்தி  கொள்ள வேண்டும் என ஓவ்வெரு பெற்றோரும்      

   


20. குழப்பத்திற்கு ஆளாகாதே
21. குடும்பம்  ஒரு  மூலாதாரம்
22. நேரத்திற்கு  செல்
23. சூழ்ச்சி வலையில் சிக்காதே
24. உலகை சுற்றி வா
25. சுனாமியை  சந்திக்க  தயார்  செய்

    



     




    .



    

No comments: