மக நட்சத்திரத்தில் பிறந்து ஜெகத்தை ஆளப்பிறந்தவள்
சிம்ம ராசியில் தோன்றி எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவள்
பல நேரங்களில் அடைமொழிகள் வெறும் வாய்மொழிகளாகவே இருக்கும். ஆனால் ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கையில் அடைமொழிகளும் உண்மையாகவே இருக்கிறது.
1948 ஆம் ஆண்டு பிப்ரவரி திங்கள் 24 ஆம் தேதியில் மைசூருக்கு அருகே உள்ள மேல்கோட்வில் ஜெயராமன் வேதவல்லி தம்பதியருக்கு மகளாக ஜெயலலிதா பிறந்தார். அன்றிலிருந்து 2016 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 5ஆம் தேதி தனது கடைசி மூச்சு வரை, ஜெயலலிதாவின் வாழ்க்கை பல ஏற்ற இறக்கங்களை கண்டது.
இளமையில் ஏழ்மை, இரண்டு வயதில் தந்தையை இழந்தது, பதினொரு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தது, பன்னிரண்டு வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம், ஆறு மொழிகளில் பேசும், எழுதும் திறன், பல மொழி திரைபடங்களில் கதாநாயகியாக வலம் வந்தது, 34 வயதில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனாது,
தமிழ் நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், ஐந்து முறை முதல்வர், முப்பது வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை வெற்றிபெறச்செய்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைத்தது, தனிப்பெண்ணாக பல இன்னல்களை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோட்டது என்று அம்மு என்கிற புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.
இளமையில் ஏழ்மை, இரண்டு வயதில் தந்தையை இழந்தது, பதினொரு வயதில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தது, பன்னிரண்டு வயதில் பரதநாட்டிய அரங்கேற்றம், ஆறு மொழிகளில் பேசும், எழுதும் திறன், பல மொழி திரைபடங்களில் கதாநாயகியாக வலம் வந்தது, 34 வயதில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனாது,
தமிழ் நாட்டின் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவர், ஐந்து முறை முதல்வர், முப்பது வருடங்களுக்கு பிறகு தமிழ் நாட்டில் ஆளும் கட்சியை வெற்றிபெறச்செய்து மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைத்தது, தனிப்பெண்ணாக பல இன்னல்களை தகர்த்தெறிந்து வெற்றி நடைபோட்டது என்று அம்மு என்கிற புரட்சித்தலைவி அம்மா ஜெயலலிதாவின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது.
ஐயங்கார் குடும்பத்தில் குழந்தைகளுக்கு தாத்தா பாட்டி பெயர்களை சூட்டுவது வழக்கம். ஜெயலலிதாவுக்கும் பாட்டியின் பெயரான கோமளவல்லி என்று முதலில் பெயர் சூட்டினார்கள். பின்பு "ஜெயா விலாஸ்" மற்றும் "லலிதா விலாஸ்" என்ற இரண்டு வீடுகளில் வளர்ந்ததால் அவர்க்கு ஜெயலலிதா என்ற பெயர் வந்தாக கூறுகின்றார்கள். வீட்டில் செல்லமாக அம்மு என்று அழைத்தார்கள்.
ஜெயலலிதாவின் மூதாதையர்கள் 108 வைணவ தேசங்களின் முதல் தேசமான ஸ்ரீரங்கத்திலிருந்து 13ஆம் நூற்றாண்டு காலத்தில் மைசூருக்கு இடம் பெயர்ந்தார்கள். வைணவத்தை கட்டிக்காக்கும் பொறுப்பில் இருந்த குடும்பம் ஜெயலலிதாவின் குடும்பம், சிவத்தை போற்றிய சோழ அரசர்கள் கொடுத்த துன்பங்களினால் மைசூரு மஹாராஜாவிடம் வேலைக்கு சேர்ந்தார்கள் அம்முவின் வைணவம் காக்கும் முன்னோர்கள்.
நரசிம்ம ரெங்காச்சாரி, ஜெயலலிதாவின் பாட்டனார் (அப்பாவின் அப்பா) மைசூரு மஹாராஜாவிற்கு மருத்துவராக விளங்கினார். ரெங்கசுவாமி ஐயங்கார், ஜெயலலிதாவின் தாத்தா (அம்மாவின் அப்பா) பெங்களுருவில் உள்ள ஹிந்துஸ்தான் ஏரோநானுட்டிக்கல் (HAL) கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் வழக்கறிஞராக இருந்தாலும் குடும்ப சொத்தை விரையம் செய்துவிட்டார். ஜெயலலிதாவின் இரண்டவது வயதில் அப்பா ஜெயராமன் இறந்து விட்டார். அம்மா வேதவல்லி இரண்டு குழந்தைகளையும் அழைத்து கொண்டு பெங்களுருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். அங்கு தட்டச்சு (Typewriting) மற்றும் சுருக்கெழுத்து (Shorthand) கற்று கொண்டு அலுவலக வேலைக்கு செல்ல தயாராகிவிட்டார்.
1952 ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் அம்மா வேதவல்லி சென்னையில் விமான பணிப்பெண்ணாகவும் நாடக நடிகையாகவும் இருந்த தனது தங்கை அம்புஜவல்லியுடன் சேர்ந்து கொண்டார். ஒரு தனியார் அலுவலகத்தில் வேதவல்லி வேலை செய்து கொண்டு நாடகங்களில் சந்தியா என்ற பெயரில் நடிக்க தொடங்கினார்.
1950ஆம் ஆண்டு முதல் 1958 ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா பெங்களுருவில் வளர்ந்து வந்தார். அங்கு உள்ள பிஷப் காட்டன் பள்ளியில் அம்மு என்கிற ஜெயலலிதா ஆரம்ப கல்வியை கற்றார்.
1958ஆம் ஆண்டு தனது தாய் வேதவல்லி என்கிற சந்தியாவுடன் சென்னையில் அம்மு சேர்ந்து கொண்டார். Church Park Presentation Convent (Sacred Heart ) பள்ளியில் படிப்பை தொடந்தார். அங்கே அம்முவை ஜெயா மற்றும் லல்லி என்ற பெயர்களில் அழைத்தார்கள். மாநிலத்தில் முதல் மாணவியாக தனது பத்தாம் வகுப்பில் வெற்றிவாகை சூடினார். ஒரு நாள் மட்டும் Stella Maris கல்லூரியில் மாணவியாக இருந்தார்.
கே.ஜே.சரசாவின் சிசியையாக சேர்ந்து பாரதநாட்டியம் கற்று 1960ஆம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முன்னால் அம்மு சென்னையில் அரகேற்றம் செய்தார். அம்முவின் நாட்டிய திறமையையும் அழகுகையும் அறிவையும் பார்த்த நடிகர் திலகம் "நீ நாடு போற்றும் நடிகை ஆவாய்" என்றார்.
பரதநாட்டியம் மட்டுமின்றி மோஹினியாட்டம், கதக், மணிப்புரி போன்ற நாட்டிய கலைகளும் கற்று பெருமை சேர்த்தார். பாரம்பரிய இசை மற்றும் மேற்கத்திய பியானோவிலும் அம்மு தனது திறமையை வெளிப்படுத்தினார்.
1961 ஆம் ஆண்டு கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமார் நடித்த ஸ்ரீ ஸஹீலா மஹாதமே படம்பிடிப்பில் குறிப்பிட்ட குழந்தை நடச்சத்திரம் வராததால் அம்முவை நடிக்க வைத்துவிட்டார்கள். அதுவே அம்மு என்கிற ஜெயலலிதாவின் முதல் படம். அடுத்த இருபது வருடங்களில் சுமார் 140 படங்களில் நடித்துள்ளார். அம்மு நடித்த எல்லா படங்களும் வெள்ளி விழா கண்ட படங்கள்.
1982 ஆம் ஆண்டு MGR ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைத்து வந்தார். அதே ஆண்டு கடலூரில் நடைபெற்ற அஇஅதிமுக கூட்டத்தில் "பெண்ணின் பெருமை" என்ற தலைப்பில் தனது அரசியல் கன்னி பேச்சை பேசினார். 1984 ஆம் ஆண்டு இந்திய பாராளுமன்றத்தின் மேல்சபைக்கு தேர்வு செய்யப்பட்டார். ஐந்து முறை முதல்வர், முதல் எதிர்க்கட்சி பெண் தலைவி போன்ற மகத்தான சாதனைகளுக்கு சொந்தக்காரானார்.
கோடான கோடி மக்களின் கண்ணீர், இந்திய பெருநாட்டின் குடியரசு தலைவர், பிரதமர், 130 வருட காங்கிரசு கட்சின் துணை தலைவர், வெளிநாட்டு தூதுவர்கள், ஒன்பது மாநிலங்களின் முதலமைச்சர்கள், எதிரிகளின் புகழாரம், இப்படி யாருக்கும் கிடைக்காத மரியாதை ஜெ.ஜெயலலிதாவின் இறுதி பயணத்தில் கிடைத்திருக்கிறது.
நாள், நட்சத்திரம், நேரம்,காலம் பார்த்தாலும், ஜெயலலிதா தனியாக, சரியாக சிந்தித்து செயல்பட கூடிய தலைவி. வார்த்தைகளை அளந்து தேவையான இடத்திலும் நேரத்திலும் பேசுவதினால் தான் அவர் உலக தலைவர்களுக்கும் பிடித்த தலைவியானார்.
சாணக்கியர், மெக்கைவல்லி போன்ற அரசியல் தத்துவ ஞானிகளின் வார்த்தைகளுக்கு உதாரணாமாக விளங்கியவர். எந்த துறையில் நுழைந்தாலும் அந்த துறையில் சிகரத்தை எட்டியவர்.
- மைசூரு வாசம்
- இளமையில் ஏழ்மை
- சூழ்நிலை குழந்தை நட்சத்திரம்
- நாட்டிய சிகாமணி
- பல மொழி திறன்
- பள்ளி கல்வியில் உச்சம்
- விருப்ப பொழுதுப்போக்கு
- திரையுலக பிரவேசம்
- தனி பெண்
- ஆன்மிக வழி
- ஆசான் எம்ஜிஆர்
- அரசியலுக்கு அடித்தளம்
- மேலச்சபை உறுப்பினர்
- எம்ஜிஆர் மறைவு
- இளைய எதிர்க்கட்சி தலைவி துரைமுருகன்
- முதலமைச்சர்
- சாதனைகளும் வேதனைகளும்
- ஊழல் குற்றசாட்டுகள்
- கைது
- மீண்டும் ஜெயா
- நல்லாட்சி 2001-2006
- மனஉறுதி
- நக்கீரன் 1996 ஊட்டி தற்கொலை
ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கை மைல் கல்கள்
1981 - மதுரை உலக தமிழ் மாநாட்டில் பங்கேற்ப்பு
1982 - தமிழ்நாட்டின் சத்துணவு திட்டத்தூதுவராக எம்ஜிஆர் நியமனம் செய்தார்
1983 - திருச்செந்தூர் இடைத்தேர்தல் பிரச்சாரம்
1999 - பிரபல தொலைக்காட்சி நடிகை சிமி க்ரேவால்க்கு பேட்டி
No comments:
Post a Comment